ஸ்ரீரங்கம் கீழ வாசல் ஸ்ரீபகவதி அம்மன்கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

ஸ்ரீரங்கம் கீழ வாசல் ஸ்ரீபகவதி அம்மன்கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
X

ஸ்ரீரங்கம் கீழவாசல் ஸ்ரீபகவதி  அம்மன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவையொட்டி யாகபூஜை நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் கீழ வாசல் ஸ்ரீபகவதி அம்மன்கோவில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இக்கோவிலின் அருகில் உள்ள உத்தரவீதிகள் மற்றும் சித்திரை வீதிகளிலும் அதனை ஒட்டியுள்ள வீதிகளிலும் ஏராளமான கோவில்கள் உள்ளன. அந்த வகையில் ஸ்ரீரங்கம் கீழவாசல் ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில், பகவதி அம்மன், பரிவார தெய்வங்களான மாணிக்க விநாயகர், சிற்றேரி கருப்பு, முனீஸ்வரர், பாம்பாலம்மன், மதுரை வீரன் சன்னதிகளில் கடந்த செப்டம்பர் மாதம் 7ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து, தினமும் மண்டலாபிஷேக சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. மண்டபாலபிஷேக பூர்த்தி விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று ம(24ம்தேதி) மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கணபதி ஹோமம், பூர்ணாஹூதியும் உள்ளிட்ட முதல் கால யாக பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து இன்று (25ம்தேதி) காலை 8.30 மணி முதல் பகல் 11.30 மணி வரை இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி, மகா அபிஷேகம், மகா தீபாராதனையுடன் மண்டாலபிஷேக பூர்த்தி விழா நடந்தது. தொடர்ந்து பிரசாத விநியோகம், அன்னதானமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிரசாதங்களையும் வாங்கி சென்றனர். விழா ஏற்பாடுகளை ஆலய விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story
photoshop ai tool