திருச்சி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது

திருச்சி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது
X
மகளை கற்பமாக்கிய சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் வெள்ளிவாடி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமியின் வீட்டிற்கு தன்னுடைய அம்மாவின் தங்கையின் கணவர், திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகில் உள்ள குரும்பப்பட்டி யை சேர்ந்த முருகன் விருந்தினராக கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் வந்துள்ளார். விருந்தினராக வந்தவர் தனக்கு மகள் முறை என்றும் பாராமல் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறபடுகிறது.

இந்த நிலையில் வயிற்று வலி என கூறிய சிறுமியை மருத்துவ மனைக்கு அழைத்து சென்ற போது அவள் 5 மாத கர்ப்பமாக இருக்கிறார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலர் சுந்தரி ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை செய்து தனக்கு மகள் முறை என்றும், பாராமல் சிறுமியை கர்ப்பமாக்கிய முருகன் மற்றும் விஷயம் தெரிந்தும் தெரியாதது போல் இருந்த அவருடைய மனைவி ராமாயி ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்