தனி நபரால் பூட்டப்பட்ட கோயிலை திறக்க கோரி திருச்சி கலெக்டரிடம் மனு

தனி நபரால்  பூட்டப்பட்ட கோயிலை  திறக்க கோரி திருச்சி  கலெக்டரிடம் மனு

தனி நபரால் கோயில் பூட்டப்பட்டது பற்றி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.

திருச்சி அருகே தனி நபரால் பூட்டப்பட்ட சிவன் கோவிலை மீண்டும் திறக்க வலியுறுத்தி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா சோமரசம்பேட்டை அருகே உள்ள கீழ வயலூர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் தலைமையில் அந்தபகுதி மக்கள் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.மேள தாளம், வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பது குறித்து ரவிக்குமார்செய்தியாளர்களிடம் கூறுகையில், கீழ வயலூர் கிராமத்தில் ஒப்பில்லாமணியம்மை ஸ்ரீ வேதபுரீஸ்வரர்கோவில் உள்ளது. இந்த கோவில்ஊர் காவல் தெய்வமான வெள்ளந்தாங்கி அம்மன்திருக்கோவில் வளாகத்தில்அமைந்துள்ளது. இந்த கோவில்ஊர் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும். வெள்ளந்தாங்கி அம்மன்கோவிலுக்காக கொடுக்கப்பட்டஇடத்தில் வேதபுரீஸ்வரர் கோவில்நிறுவப்பட்டு சிவனடியார்களால் முறையாக பிரதிஷ்டைசெய்யப்பட்டு 5 கால பூஜை, மூன்றுகால அபிஷேகம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பின்னர்படிப்படியாக அம்பாள், பைரவர்,விநாயகர், சிலைகள் நிறுவப்பட்டு பூஜை நடந்து வருகின்றது.

இந்த கோவிலில் ஆயுர்தேவிஅம்பாள் சிலை நிறுவுவதுதொடர்பாக பிரச்சனைஎழுந்துள்ளது. இதனால் ஊரில்சிலர் கோவிலை பூட்டிவிட்டுசென்று விட்டனர். பின்னர் தாசில்தார் தலைமையில் பேச்சுவார்த்தையில் முடிவுஎடுத்துக் கொள்ளலாம் என்றும்,ஆயுர்தேவி சிலையை வெளியேற்றிவிடலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. பின்னர் கோவிலில் இருந்த ஒரு மரத்தின் கிளையை பராமரிப்பு காரணமாக சிவனடியார்கள் வெட்டினர்.

அப்போது ஊர்பட்டையதார் அறிவழகன் மற்றும்அவரது மனைவி வசந்தா தரப்பினர் இது தொடர்பாக தகராறு செய்து, கோவிலை பூட்டி விட்டனர்.அதோடு சிவனடியார்களையும் உருட்டு கட்டையால் தாக்கினர்.இது தொடர்பாக சோமரசம்பேட்டைகாவல் நிலையத்தில் புகார்அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணைமேற்கொண்டு கோவிலை பூட்டியதுதவறு என்று கூறினர். அதனால் ஆட்சியர் சிவனாலயத்தில் அத்து மீறிநுழைந்து வழிபாடு செய்த சிவனடியார்களை அடித்துத்துரத்தி, கோவிலை பூட்டியஅறிவழகன் மற்றும் வசந்தா தரப்பினர் மீதும், அறிவழகன் மனைவி பெயரில் போலி பட்டா ஏற்படுத்தி கோவில் நிலத்தைஅபகரிக்க துணைபோகும்குமாரவயலூர் அறநிலையத்துறைஅலுவலர் ஜெய்கிஷன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.இதைத் தொடர்ந்து ஊர் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story