மனைவியை கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை: திருச்சி மகளிர் கோர்ட்
பைல் படம்.
திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை மல்லியம்பத்து பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 37), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி (வயது 30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சந்திரசேகருக்கு ஜெயந்தியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு நடந்த போது, ஆத்திரம் அடைந்த சந்திரசேகர் கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் மட்டப்பலகையால் ஜெயந்தியை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு ஜெயந்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்திரசேகரை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருச்சி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வக்கீல் அருள்செல்வி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி ஸ்ரீவத்சன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட சந்திரசேகருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu