குழுமணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி, எம்பி திருநாவுக்கரசர் நேரில் ஆய்வு

குழுமணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி, எம்பி திருநாவுக்கரசர் நேரில் ஆய்வு
X

திருச்சி மாவட்டம்  குழுமணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை எம்.பி.திருநாவுக்கரசர் ஆய்வு செய்தார்.

குழுமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணியினை எம்பி திருநாவுக்கரசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டத்திற்கு 14 ஆயிரத்து 300 கோவில் தடுப்பூசிகள் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியானது திருச்சி மாவட்டத்தில் 18 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஊரகப் பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திருச்சி வந்துள்ள எம்பி திருநாவுக்கரசர் நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட குழுமணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடும் பணி இணை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.மேலும் மருதித்துவமனை மருத்துவர்கள் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து சென்றார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!