ஸ்ரீரங்கம் கோவிலில் 2ம் பிரகாரம்: உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு

ஸ்ரீரங்கம் கோவிலில் 2ம் பிரகாரம்: உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு
X
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 2ம் பிரகாரம் சுற்றுவது தொடர்பான வழக்கு உள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். இந்த கோவிலுக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர். இந்த கோவிலின் கருவறையை அடுத்துள்ள இரண்டாம் பிரகாரத்தில் பக்தர்கள் வலம் வந்து மூலவர் ரெங்கநாதரை வழிபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு திருப்பணியின் போது பக்தர்கள் இரண்டாம் பிரகாரத்தில் வலம் வருவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது. இதுநாள் வரை பக்தர்களை அந்த பகுதியில் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன் என்பவர், 2017-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு கொண்ட இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.

வழக்கின் இறுதித் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் இன்று காலை 6 மணி முதல், 9 மணி வரை ஸ்ரீரங்கம் கோவிலில் நேரில் ஆய்வு செய்தனர். கோவில் 2-ஆம் பிரகாரத்தில் பக்தர்கள் அனுமதிக்கும் விதம் குறித்து கோவில் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர். இந்த ஆய்வின்போது கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி, உதவி ஆணையர் கந்தசாமி உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!