ஜல்லிக்கட்டில் விதி மீறல்: ஊராட்சி தலைவர் உள்பட 4 பேர் மீது வழக்கு

ஜல்லிக்கட்டில் விதி மீறல்: ஊராட்சி தலைவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
X
திருச்சி அருகே ஜல்லிக்கட்டில் கொரோனா விதி மீறியதாக ஊராட்சி தலைவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகம் 390 காளைகளுக்கு மட்டும் அனுமதி அளித்திருந்த நிலையில் 600 காளைகள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி போட்டி நேரம் முடிவடைந்ததை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் மீதமுள்ள காளைகளை அதன் உரிமையாளர்கள் அவிழ்த்து விட்டனர், இதில் பார்வையாளர் நவலூர்குட்டப்பட்டு வண்ணங்கோவில் பாரதி நகரைச் சேர்ந்த வினோத் (வயது 24) என்பவர் மாடுமுட்டி உயிரிழந்தார். மேலும் போலீசார் உள்பட 46 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக ராம்ஜிநகர் போலீசார் நவலூர் குட்டப்பட்டு ஊராட்சி மன்றதலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஊர் மணியக்காரர் தேவராஜன், ஜெரின் ராஜதுரை, ஒன்றிய கவுன்சிலர் சண்முகம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story