வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம் சார்பில் அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி

வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம் சார்பில் அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி
X
திருச்சி வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தின் மூலம் அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

திருச்சி ஜீயபுரம் அருகில் திருச்செந்துறையில் அமைந்துள்ள தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் திருச்சி வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையத்தின் மூலம் அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு வளங்குன்றா நீருயிரி மைய இயக்குனர் ஸ்டீபன் சம்பத்குமார் தலைமை தாங்கினார். வளங்குன்றா மைய தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இந்த பயிற்சி முகாமில் அலங்கார மீனின் வகைகள், வளர்ப்பது குறித்தும், இனபெருக்கம் குறித்தும், அவற்றை விற்பனை செய்வது, அதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும், அந்த அலஙகார மீன்களுக்கு உணவு செய்முறை குறித்தும் பயிற்சியை உதவி பேராசிரியர்கள் ஆனந்த், வேல்முருகன், தினேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியை திருச்சி வளங்குன்றா மைய பொறுப்பாளர் சங்கவி தொகுத்து வழங்கினார். இந்த பயிற்சியில் 20 பேர் கலந்து கொண்டனர். முடிவில் ராதிகா நன்றி கூறினார்.

Tags

Next Story