முத்தரசநல்லூர் அரசு தொடக்கப்பள்ளியில் நீதி போதனை வகுப்பு துவக்கம்

முத்தரசநல்லூர் அரசு தொடக்கப்பள்ளியில் நீதி போதனை வகுப்பு துவக்கம்
X

திருச்சி முத்தரசநல்லூர் அரசு பள்ளியில் நீதி போதனை வகுப்பு துவக்கி வைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் அரசு தொடக்கப்பள்ளியில் நீதி போதனை வகுப்பு துவக்கப்பட்டது.

தமிழக அரசின் ஆணைப்படி திருச்சி மாவட்டம் அந்த நல்லூர் ஒன்றியம், முத்தரசநல்லூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நீதி போதனை வகுப்பு இன்று தொடங்கப்பட்டது.அந்த நல்லூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் கு. மீனா தலைமையில் நீதி போதனை வகுப்புகளை திருப்பராய்த் துறை விவேகானந்தா தொடக்கப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ரெங்கசாமி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் சகாய சந்திரா வரவேற்புரையாற்றினார். உதவி ஆசிரியர் மலர் விழியாள் நன்றி கூறினார். பெல் சிட்டா மேரி , இந்திரா ஸ்ரீவித்யா. இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!