திருச்சி ஸ்ரீரங்கத்தில் வீடு தேடி பள்ளிகள் திட்டம் அறிமுகம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வீடு தேடி பள்ளிகள் திட்டம் அறிமுகம்
X

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வீடு தேடி பள்ளிகள் திட்டம் அறிமுக கூட்டம் நடந்தது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தமிழகத்தில் வீடு தேடி பள்ளிகள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

தமிழக பள்ளி கல்வித் துறை சார்பாக அக்டேபர் மாதம் 2 -ம் தேதி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்று வீடு தேடி பள்ளிகள் திட்டத்தை அறிமுகம் செய்து ஆலோசனை வழங்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டன.

இந்த அறிவிப்பின்படி காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2- ம் தேதி ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகரில், சமுக ஆர்வலர் மாரி என்கின்ற பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், நல்லாசிரியர் விருது பெற்ற வை.சைவராஜூ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கருத்துரை வழங்கினார்.

திட்டத்தினை முன் மொழிந்து ஆரோக்கிய அவ்ரத் அமைப்பின் நிறுவனர் முனைவர். பிரியா மகேஷ்வரி, கவி சமூக நல அறக்கட்டளை இயக்குநர் ஆர்.வி.கார்த்திகேயன், கங்காரு கருணை இல்லங்களின் நிறுவனர் சி.ஆர்.ராஜா, புது சுவாசம் அறக்கட்டளை செயலாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட சமூக அமைப்பினர் வாழ்த்தி பேசினர்.

நிறைவாக , இந்த திட்டத்தினை ஸ்ரீரங்கத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சமூக அமைப்பினர் வழியாக கொண்டு சென்று கல்வி பணி செய்வது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story