ஸ்ரீரங்கத்தில் இந்து மகாசபா தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஸ்ரீரங்கத்தில் இந்து மகாசபா தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
X
ஸ்ரீரங்கத்தில்  அகில பாரத இந்து மகாசபா  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து ஸ்ரீரங்கத்தில் இந்து மகாசபா ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஆகம விதிகளின்படி செயல்படும் ஆலயங்களில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நியமிக்கப்பட்டுள்ள அர்ச்சகர்கள் நியமனத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். இந்து ஆலயங்களில் ஆகம விதிப்படி இறைவனுக்கு பணி செய்யும் சிவாச்சாரியார்கள் மற்றும் அர்ச்சகர்களை அவமதிக்கும் வகையில் போடப்பட்டுள்ள ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட அகில பாரத இந்து மகா சபா சார்பில் ஸ்ரீரங்கத்தில் நேற்று கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ராகவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி விஜய பாரத மக்கள் கட்சி மாநில தலைவர் ஜெய்சங்கர், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் முருகேஷ் ராஜன், இந்து மக்கள் கட்சி துணைத்தலைவர் மாரி ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் இந்து ஆகம விதிப்படி செயல்படும் இந்து ஆலய ஆன்மீக தர்மத்தை அழிக்காதே என கோஷமிட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai as the future