திருச்சி மாவட்டத்தில் கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் அதிரடி சோதனை

திருச்சி மாவட்டத்தில் கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் அதிரடி சோதனை
X
கடைகளில் ஆய்வு நடத்திய அதிகாரிகள்.
கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பீடி, சிகரெட் போன்ற பொருட்கள் விற்கப்படுகிறதா என சுகாதார ஆய்வாளர்கள் அதிரடி சோதனை.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஜியபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார ஆய்வாளர்கள் தக்ஷிணாமூர்த்தி, சீனிவாசன், வினோத் ஆகியோர் தலைமையில் களப்பணியாளர்கள் தமிழக அரசு விதிமுறைப்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பீடி, சிகரெட் போன்ற பொருட்கள் விற்கப்படுகிறதா? எனவும், பொதுமக்கள் முககவசம் அணிந்து செல்கிறார்களா? என அந்தப் பகுதிகளில் கடைகளில் வியாபாரம் செய்வோர் அரசு விதிமுறைப்படி முககவசம் அணிந்து உள்ளார்களா? என்பதனை ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அரசு விதிமுறையை மேற்கொள்ளாதவாறு முககவசம் அணியாமல் இருந்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த பகுதிகளில் புகை பிடிக்கும் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது என்று இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது என சைனஜ் பலகை இல்லாமல் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதால் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோன்று அப்பகுதி மக்களுக்கு கடை விற்பனையாளர்களுக்கு அரசு விதிமுறையை விளக்கமாக கூறி, அப்பகுதிகளில் அரசு விதிமுறைப்படி செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings