திருச்சி ஸ்ரீரங்கத்தில் தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க கூட்டம்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க கூட்டம்
X

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகளின் ஆலோசனை கூட்டம் ஸ்ரீரங்கத்தில் ஆர்.சரசு தலைமையில் நடைபெற்றது. நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டு ஸ்ரீரங்கம் பகுதி குழுகெளரவத் தலைவராக ராஜகோபால், தலைவராக சரசு. துணை தலைவராக பார்வதி. செயலாளராக. தமிழரசி,துணை. செயலாளராக சீனிவாசன், பொருளாளராக பிரபு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டத்தில் வியாபாரிகளை முறையாக கணக்கெடுத்து அனைவருக்கும் அடையாள அட்டை. தெருவியாபாரிகளின் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த கோரி. சட்டத்திற்கு புறம்பாக தரை கடை வியாபாரிகளை அச்சுறுத்துவது. அப்புறப்படுத்துவது. வணிக குழு தேர்தலை சட்டபடி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த கோரி,அனைவருக்கும் வங்கி கடன் எளிமையாக கிடைக்ககோரி, வீடற்ற தரை கடை, தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு இலவச வீட்டுமனை வழங்ககோரி வருகிற 22/10/2021 வெள்ளிகிழமை காலை 10.00 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கபட்டது.

தரைக்கடை சங்க செயலாளர் அன்சர் தீன்,தலைவர். S.சிவா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி பகுதி குழு செயலாளர் சொக்கி. சண்முகம். மாதர் சங்கம் பார்வதி, சங்க நிர்வாகி சரவணன் உள்ளிட்ட வியாபாரிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்