திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் ஆடு திருடியவர்கள் கைது

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் ஆடு திருடியவர்கள் கைது
X
திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் ஆடு திருடியவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் மயில்வாகனன் வயது (23) என்பவர் குடியிருந்து வருகிறார். இவர் வீட்டு வாசலில் தான் வளர்க்கும் இரண்டு ஆடுகளை கட்டிப் போட்டிருந்தார். அந்த ஆடுகள் காணாமல் போகவே, இது குறித்து கே.கே. நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆடு திருடிய அதே பகுதியில் வசிக்கும் கிளிண்டன்(வயது 23), சந்தோஷ்பிரியன்(20), புகழேந்தி(23), சென்னையை சேர்ந்த வினித்(19) பொன்மலை மிலிட்டரி காலனியை சேர்ந்த மரிய ஜான்போஸ்கோ (21)ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 2 ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story