கடிதம் எழுதி வைத்து விட்டு காதலனுடன் பெண் மாயம்: போலீசார் விசாரணை

கடிதம் எழுதி வைத்து விட்டு  காதலனுடன் பெண் மாயம்: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

ஸ்ரீரங்கத்தில் கடிதம் எழுதி வைத்து விட்டு காதலனுடன் மாயமான பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் கீதாபுரத்தை சேர்ந்தவர் வரன் (வயது 50). இவரது மனைவி தவசு (47). இருவரும் தள்ளுவண்டியில் அம்மா மண்டபம் சாலையில் துணி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களது மகள் சரண்யா (19). இவர் பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் செல்போன் மூலம் கல்லணை கோவிலடி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பெற்றோர் வியாபாரத்திற்காக சென்ற நிலையில், வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு சரண்யா மாயமானார். இரவு வீடு திரும்பிய பெற்றோர்கள் மகளை காணாததையும், கடிதத்தில் காதலனுடன் செல்வதாக எழுதி வைத்திருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசில் தாய் தவசு புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மாயமான சரண்யாவை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!