திருச்சி அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் பெண் தற்கொலை

திருச்சி அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் பெண் தற்கொலை
X
திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் குடும்ப தகராறு காரணமாக பெண் அரளி விதை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகில் உள்ள சிறுகமணி மலையப்ப நகரை சேர்ந்தவர் அரங்கநாதன் .(வயது 42). இவருடைய மனைவி இளமதி (வயது 38). தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 22-ந்தேதி அரளி விதையை அரைத்து சாப்பிட்டுள்ளார்.

இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்தவரை மீட்டு பெட்டவாய்த்தலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சையில் இருந்தவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால் அவரது உறவினர்கள் வீட்டிற்கு கொண்டு வரும் பொழுது இறந்து விட்டார்.

இது குறித்து தகவலறிந்த பெட்டவாய்த்தலை போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!