திருச்சியில் போலி சூரியகாந்தி எண்ணெய் தயாரிப்பு, நிறுவனத்துக்கு சீல்

திருச்சியில் போலி சூரியகாந்தி எண்ணெய் தயாரிப்பு, நிறுவனத்துக்கு சீல்
X
திருச்சியில் சூரிய காந்தி சமையல் எண்ணெய் பாக்கெட்டில் பாமாயிலை நிரப்பி விற்பனை செய்த நிறுவனத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் சமையல் எண்ணெய் பேக்கிங் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வந்தது. சூரியகாந்தி சமையல் எண்ணையை பேக்கிங் செய்வதாக இந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.

"சில்வர் கோல்ட் சன் பிளவர் ஆயில்" என்ற பெயரில் இந்த நிறுவனம் சூரியகாந்தி எண்ணையை பேக்கிங் செய்து விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்தியது.திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறிய மற்றும் பெரிய மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்களில் இந்த எண்ணை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இங்கு பேக்கிங் செய்யப்படும் சூரியகாந்தி எண்ணெயில் தரம் இல்லை என்றும், கலப்படம் செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.இதைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிர்வாகத் துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் அந்த குறிப்பிட்ட எண்ணை நிறுவனத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சூரியகாந்தி எண்ணெய்க்கு பதிலாக பாமாயிலை நிரப்பி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு இருந்த எண்ணை மாதிரிகளை அலுவலர்கள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த 5,410 லிட்டர் பாமாயிலையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து நிறுவனத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!