திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடந்து சென்றபோது மயங்கி விழுந்து மூதாட்டி சாவு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடந்து சென்றபோது மயங்கி விழுந்து மூதாட்டி சாவு
X

ஸ்ரீரங்கம் காவல் நிலையம் (பைல் படம்)

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடந்து சென்றபோது மயங்கி விழுந்து மூதாட்டி இறந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேசன் ரோட்டை சேர்ந்தவர் நாகலட்சுமி (வயது 80). இவர் கடந்த மாதம் 25-ஆம் தேதி கடைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து மயங்கினார்.இதையடுத்து அக்கம்பக்கதினர் நாகலட்சுமியை மீட்டுசிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சைபலனின்றி நேற்று முன்தினம் நாகலட்சுமி இறந்தார்.இது குறித்து நாகலட்சுமியின் பேரன் மகேந்திரன்கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!