திருச்சி அருகே பஸ் மீது மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து

திருச்சி அருகே  பஸ் மீது மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்து
X

மின்கம்பம் சாய்ந்து விழுந்ததால் சேதம் அடைந்த அரசு பஸ்.

திருச்சியில் அரசு பஸ் மீது மின்கம்பம் சாய்ந்தது. பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருச்சியில் இருந்து அரசு பஸ் ஒன்று இன்று அதிகாலை பயணிகளை ஏற்றி கொண்டு திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த்து. இந்த பஸ்சை கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை பகுதியை சேர்ந்த ராதா (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார்.

அந்த பஸ் கம்பரசம்பேட்டை அருகில் உள்ள மல்லாச்சிபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ரோட்டின் ஓரத்தில் இருந்த மின் கம்பம் ஒன்று திடீரென அரசு பஸ்சின் முன் பகுதியில் விழுந்தது. இதனால் பஸ்சின் முன் பகுதியில் இருந்த கண்ணாடி உடைந்தது.

இந்த சம்பவத்தால் பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். ஆனால் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பஸ்சில் வந்த பயணிகள் அனைவரும் மாற்று பஸ் மூலம் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் இன்று அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!