திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் எட்டு திக்கு கொடியேற்றம்

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் எட்டு திக்கு கொடியேற்றம்
X

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் எட்டு திக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் எட்டு திக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நட்தது.

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குகிறது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் தேரோட்டம் விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டிற்கான பங்குனி தேரோட்டம் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனையொட்டி இவ்விழாவிற்கான எட்டுத்திக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று கோவில் மூன்றாம் பிரகாரத்தில் நடைபெற்றது.இதற்கு முன்னதாக உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, பிரியாவிடை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு கொடிமரம் அருகே வந்தனர் .அப்போது அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது .

பின்னர் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்தனர். அப்போது மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டு தூத்துக்குடி மரங்களிலும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யானை அகிலா கொடி மரங்களுக்கு மரியாதை செலுத்தியது. இதனைத் தொடர்ந்து இரவு சோமாஸ்கந்தர், அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.


விழா தொடர்ந்து வருகிற 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story