திருச்சியில் நீர் பாய்ச்சுவதில் தகராறு பெண் அடித்து கொலை

திருச்சியில் நீர் பாய்ச்சுவதில் தகராறு பெண் அடித்து கொலை
X
திருச்சி மாவட்டம் தாயனூர் கிராமத்தில் வயலுக்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை போலீஸ் சரகம் தாயனூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரலக்கன் இவரது மனைவி ரெங்கம்மாள் .இவர்களுக்கு உறவினரான பூசைமணி நிலத்திற்கு நீர் பாய்ச்சுவது தொடர்பாக தகறாறு இருந்து வந்தது.

இன்று வழக்கம் போல் ஏவூர் வாய்க்கால் கரையில் ரங்கம்மாளுக்கும் பூசைமணிக்கும் தகறாறு ஏற்பட்டது. அப்போது பூசைமணியின் மகன்கள் மருதுபாண்டி. வீரவேல். அஜித்குமார் ஆகியோர் சேர்ந்து உருட்டுக்கட்டையால் ரங்கம்மாளை தாக்கினர். தலையில் காயம் ஏற்பட்டதால் மயங்கி விழுந்த அவர் அதே இடத்தில் இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story