ஶ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் வெள்ளி காணிக்கையை அதிகம் செலுத்தினர்

ஶ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் வெள்ளி காணிக்கையை அதிகம் செலுத்தினர்
X
ஶ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் உண்டியலில்அதிகப்பட்சமான வெள்ளியை காணிக்கையை செலுத்தினர்.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று (25.08.2021) மாதாந்திர உண்டியல்கள் திறந்து இணை ஆணையர் செ.மாரிமுத்து, தக்காரும் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களின் மண்டல இணை ஆணையரும்மான அரங்க.சுதர்சன், திருவானைக்கோயில் உதவி ஆணையர் செ.மாரியப்பன், மேலாளர் உமா ஆகியோரின் முன்னிலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டது.

இதில் ரூபாய் 28,83,705 ரொக்கம், 62 கிராம், தங்கமும், 34 கிலோ 278 கிராமும் (34278 கிராம்) வெள்ளியும், 48 வெளிநாட்டு ரூபாய் தாள்கள் கிடைக்கப்பட்டன. வெள்ளியின் அளவான 34 கிலோ 278 கிராம் மாதாந்திர உண்டியல் எண்ணிக்கையில் கிடைக்கப்பெற்ற அதிகபட்ச அளவாகும். இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோயில் பணியார்கள் மற்றும் தன்னார்வ தொண்டு பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!