ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பக்தர்கள் உண்டியல் காணிக்கை ரூ.63.96 லட்சம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பக்தர்கள் உண்டியல் காணிக்கை ரூ.63.96 லட்சம்
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பக்தர்கள் உண்டியல் காணிக்கை ரூ.63.96 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல்கள் இன்று திறந்து எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் மற்றும் தங்கம் வெள்ளி பொருட்களை எண்ணினார்கள்.

அப்போது பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் ரூ.63லட்சத்து 96ஆயிரத்து 860ம், தங்கம் 115 கிராமும், வெள்ளி 750 கிராமும், வெளிநாட்டு பணம் 59ம் இருந்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!