ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் 6 நாட்கள் பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் 6 நாட்கள் பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது
X
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் 6 நாட்கள் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதியில்லை

தமிழ்நாடு அரசு கொரோனா தொற்று பரவல் தடுக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறையின்படி (எண் 574/06.08.2021) கொரோனா நோய் தொற்று பரவலில் இருந்து பக்தர்களை காக்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிறுற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை என்ற அறிவிக்கப்படுள்ளது.

இதன் ஒருபகுதியாக ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வருகிற ஆகஸ்ட் மாதம் 27, 28, 29 தேதிகள் மற்றும் செப்டம்பர் மாதம் 3, 4, 5 தேதிகளில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதியில்லை. அனைத்து சன்னதிகளிலும் ஆகமவிதிகளுக்கு உட்பட்டு பூஜைகள் வழக்கம் போல் நடை பெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!