கொரோனா பரவல் - வண்ணத்துப்பூச்சி பூங்கா மூடல்

கொரோனா பரவல் - வண்ணத்துப்பூச்சி பூங்கா மூடல்
X

திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா திருச்சி மாநகர், ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகை புரிகின்றனர்.இந்நிலையில் தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகளின் படி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அந்த வகையில் பூங்காக்கள் செயல்பட அனுமதிக்காத நிலையில் திருச்சி, ஸ்ரீரங்கம், மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா தற்போது மூடப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!