ஸ்ரீரங்கத்தில் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா
ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்கள் படித்து வருகிறார்கள். தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் நேரடி வகுப்புகளும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கடந்த 3 மற்றும் 4-ந் தேதிகளில் இந்த பள்ளியில் படித்து வரும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. அப்போது சில மாணவர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. அதில் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பள்ளி தரப்பில் கேட்டபோது, பள்ளியில் குறிப்பிட்ட சில மாணவர்களுக்கு மட்டும் தான் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. ஆனால் அதில் 8 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகி இருப்பது குறித்து சுகாதாரத்துறையில் இருந்து இதுவரை தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu