ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நாளை ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை முகாம்

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நாளை ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை முகாம்
X
ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை முகாம் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நாளை நடக்கிறது.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. கருத்தடை சிகிச்சை செய்து கொள்ளும் ஆண்களுக்கு ரூ.1,100 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் கருத்தடை சிகிச்சை செய்யப்படும்.

சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை. உடனே வீட்டிற்கு செல்லலாம். கத்தியின்றி, ரத்த சேதம் இன்றி, தையல் தழும்பு இன்றி மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சையால் பின்விளைவுகள் இருக்காது. தகுதி வாய்ந்த ஆண்கள் முகாமில் கலந்து கொண்டு கருத்தடை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று மாவட்ட துணை இயக்குனர் (மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம்) டாக்டர் ஸ்ரீபிரியா தேன்மொழி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!