திருச்சி மாநகராட்சியில் 5 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ்

X
By - R.Ponsamy,Sub-Editor |23 Feb 2022 9:49 AM IST
திருச்சி மாநகராட்சியில் 5 ஓட்டு வித்தியாசத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவகர் வெற்றி பெற்றார்.
திருச்சி மாநகராட்சி 2-வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் வெற்றிபெற்றுள்ளார்/ இந்த வார்டில் ஜவகர் உள்பட மொத்தம் 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஜவகர் 2236 வாக்குகளும் அவருக்கு அடுத்தபடியாக வந்த சௌரிராஜன் சுயேட்சை வேட்பாளர் 2231 வாக்குகளும் பெற்றுள்ளனர்.இந்த வார்டில் 5 வாக்குகள் வித்தியாசத்தில் ஜவகர் வெற்றி பெற்றுள்ளார். இந்த வார்டில் மூன்றாவது இடத்தில் பா.ஜ.க.வும் நாலாவது இடத்திற்கு அ.தி.மு.க. வேட்பாளர் திருவேங்கடமும் தள்ளப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu