விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி சிறுவனுக்கு பாராட்டு

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி சிறுவனுக்கு பாராட்டு
X

வில்வித்தை போட்டியில் 2ம் இடம் பிடித்த மாணவர் நரேன் சிவாவிற்கு பள்ளியின் தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகர் பதக்கமும் சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்.

வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி சிறுவனுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் (CBSE) DCSA மதிப்பீட்டு வில்வித்தைப் போட்டியைச் சேலம் மாவட்ட தயான் சந்த் விளையாட்டு அகாடமி நடத்தியது.

இதில் ஆறு வயதுக்கு உட்பட்டோருக்கான 10 மீட்டர் வில்வித்தை போட்டியில், சந்தானம் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த யூகேஜி வகுப்பு பயிலும் ஆர்.நரேன் சிவா கலந்துகொண்டு இரண்டாமிடம் பிடித்து பதக்கமும் சான்றிதழும் பெற்றுள்ளார்.

அவரைச் சிறப்பிக்கும் விதமாக இன்று பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், பள்ளியின் தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகர் மாணவர் நரேன் சிவாவிற்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கிக் கௌரவித்தார்.

Tags

Next Story
ai solutions for small business