திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் கணக்கெடுப்பு பணியில் கல்லூரி மாணவர்கள்
திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்கா (கோப்பு படம்)
திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகள் கணக்கெடுக்கும் பணியில் கல்லூரி மாணவ மாணவிகள் ஈடுபட்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே மேலூரில் வண்ணத்துப்பூச்சி பூங்கா செயல்பட்டு வருகிறது. ஆசிய அளவில் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவான இதனை மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தபோது தொடங்கி வைத்தார். தற்போது இந்த வண்ணத்து பூச்சி பூங்காவிற்கு தமிழக முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செய்கிறீர்கள். அந்த வகையில் இது சிறந்த சுற்றுலா மையமாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் தமிழ்நாடு வனத்துறை மற்றும் மதுரை அமெரிக்கன் கல்லூரியுடன் இணைந்து திருச்சி புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி, பிஷப் ஹீபர் கல்லூரி, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி, ஜோசப் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி மாணவ மாணவிகள் வண்ணத்துப்பூச்சி இனங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
செப்டம்பர் முதல் ஜனவரி மாத இறுதி வரை வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் வண்ணத்துப்பூச்சிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இதில் விலங்கியல் மற்றும் தாவரவியல் துறையைச் சேர்ந்த மூன்று பேராசிரியர்கள் 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு இனங்களை சேர்ந்த வண்ணத்துப்பூச்சிகளை கண்டறிந்து பதிவு செய்து அவற்றை ஆவணப்படுத்தினார்கள்.
கணக்கெடுப்பு பணியின் போது உதவி வனப் பாதுகாவலர் சரவணகுமார், வனச்சரக அலுவலர் சுப்பிரமணியம், அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ராஜேஷ் ஆகியோர் வண்ணத்துப்பூச்சிகள் பற்றியும், அதன் உணவு தாவரங்கள், தேன் தாவரங்கள் பற்றியும் வண்ணத்துப்பூச்சிகள் மகரந்த சேர்க்கையிலும் மற்ற உயிரினங்களுக்கு உணவாகவும், சூழ்நிலை குறிக்காட்டியாகவும் இருப்பது பற்றியும் எடுத்து கூறினார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu