ஆளும் பல்லக்கில் எழுந்தருளிய ஸ்ரீரங்கம் நம்பெருமாள்.

சித்திரை தேர் திருவிழாவில் நம்பெருமாள் இன்று ஆளும் பல்லக்கில் எழுந்தருளி சேவை சாதித்தார்.

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோயில் சித்திரை தேர் திருவிழாவில் நம்பெருமாள் இன்று ஆளும் பல்லக்கில் எழுந்தருளினார்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரை தேர் திருவிழா நடந்து வருகிறது. இதில் 11ம் நாள் திருநாளான இன்று உற்சவர் ஸ்ரீ நம்பெருமாள் விருப்பன் திருநாள் நடந்தது. இத்திருநாளை முன்னிட்டு இன்று மாலை ஸ்ரீ நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலித்தார். கரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.இன்றுடன் விருப்பன் திருநாள் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!