ஸ்ரீரங்கம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் நீர்வழித்தடம் மாற்றம்
நீர்வழித்தடம் மாற்றம் செய்யப்படும் காட்சி.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோயில் திருவாராதனத்திற்கு தினமும் கொள்ளிடம் ஆற்றிலிருந்துதான் தீர்த்தம் கொண்டுவரப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொள்ளிடத்தில் குறைந்த அளவு தண்ணீரே ஆற்றின் நடுப்பகுதியில் ஒடுகிறது. இதனால் தினமும் ரெங்கநாதர் கோவில் பணியாளர்கள் ஆற்று மணலில் சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு நடந்து சென்று தீர்த்தம் சேகரிக்க வேண்டிய நிலை இருந்தது. மேலும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க செல்லும் பொதுமக்களும் சிரமப்பட்டனர்.
இதையடுத்து நடு ஆற்றில் ஓடும் நீரின் ஒரு பகுதியை ஸ்ரீரங்கம் தெற்கு பகுதிக்கு திருப்பி விட்டால், கோவில் பணியாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் பயன் பெறுவார்கள் என கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொக்கலின் இயந்திரம் மூலம் கொள்ளிடம் ஆற்றில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு தற்காலிக கால்வாய் அமைக்கப்பட்டு வடக்கு வாசல் கொள்ளிடக்கரை அருகில் நீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu