திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
X
திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்பு.

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் உள்ள மேலணையில் 2 -வது மதகு பகுதியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மிதப்பதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜீயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தண்ணீரில் இறந்த நிலையில் மிதந்தவரை மீட்டு பார்த்த போது முகம் அடையாளம் தெரியாத அளவில் இருந்தது. மேலும் அவர் வெள்ளை கலர் அரை கை சட்டையும், உள் ஜட்டியும் அணிந்திருந்தார். இறந்து கிடந்தவர் யார்? என்பது குறித்து தகவல் கிடைக்கவில்லை. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரண செய்து வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது