அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் தொடர்பான பிரச்சார கூட்டம்

மத்திய தொழிற்சங்கங்கள் நாற்பத்தி எட்டு மணி நேர வேலை நிறுத்த போராட்டம் மார்ச் 28, 29ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மக்களிடம் ஆதரவு திரட்டும் பரப்புரைக் கூட்டங்கள் மார்ச் 10 முதல் திருச்சி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இன்று மாலை 6 மணி அளவில் சோமரசம்பேட்டை கடை வீதியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட சங்க மணிகண்டம் ஒன்றிய துணைச் செயலாளர் முத்தழகு தலைமை வகித்தார் . தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட சங்க மாவட்ட துணை செயலாளர் எம். ஆர். முருகன் முன்னிலை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி.மாவட்ட பொதுச் செயலாளரும் 23வது வார்டு மாமன்ற உறுப்பினருமான க. சுரேஸ், மாவட்ட தலைவர் வே. நடராஜா, கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் செல்வகுமார்,
தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மண்டல துணைத் தலைவர் இளங்கோவன் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் போக்குவரத்து சங்க செயலாளர் கருணாநிதி, ஐ.என்.டி.யூ.சி. வெங்கட் நாராயணன் ஹெச். எம். எஸ். ஜான்சன் உள்ளிட்டோர் உரையாற்றினர். தொடக்கத்தில் மருதாம்பாள் வரவேற்புரை நிகழ்த்தினார்.முடிவில் முத்துலட்சுமி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu