திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை
X

பெட்டவாய்த்தலையில் கொள்ளை நடந்த மளிகை கடை

திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்து பற்றி போலீசார் விசாரணை. நடத்தி வருகிறார்கள்.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை காவேரி நகரில் மூக்கன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது. நேற்று இரவு வழக்கம் போலகடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் இன்று காலை மூக்கன் திரும்பி வந்து கடையை திறக்க பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் கடையின் உள்ளே சென்று பார்த்தனர். பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடையில் விற்பனை செய்து வைக்கப்பட்டிருந்த ரூ15 ஆயிரம் பணத்தை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த கொள்ளையில் துப்பு துலக்க போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

மோப்ப நாய் அங்கிருந்த மில் கேட் வரை ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!