வாரத்தின் அனைத்து நாட்களும் கோயில்களை திறக்க கோரி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

வாரத்தின் அனைத்து நாட்களும் கோயில்களை திறக்க கோரி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
X

வாரத்தின் அனைத்து நாட்களும் கோயில்களை திறக்க கோரி திருச்சி ஸ்ரீரங்கத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

வாரத்தின் அனைத்து நாட்களும் கோயில்களை திறக்கக்கோரி திருச்சி ஸ்ரீரங்கத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களை வாரத்தின் அனைத்து நாட்களும் திறக்க அனுமதிக்க கோரியும், கோவில் நகைகளை தங்க கட்டிகளாக மாற்ற இருப்பதை கண்டித்தும் பா.ஜ.க. சார்பில் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் ராம. ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பார்வதி நடராஜன், மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியம், மாநகர் மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார், மாவட்ட பொதுச் செயலாளர் பெருமாள் சங்கர், திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பார்வையாளர் சேது அரவிந்த், அரியலூர் மாவட்ட தலைவர் ஐயப்பன், பெரம்பலூர் மாவட்ட தலைவர் சந்திரசேகர், கரூர் மாவட்ட தலைவர் சிவசாமி உள்ளிட்ட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பா.ஜ.க.வினர் மத்தியில் ஸ்ரீரங்கம் வந்த அரசு பேருந்துகள் திடீரென புகுந்தது. இதனால் பா.ஜ.க.வினர் அந்த அரசு பஸ் டிரைவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசார் பா.ஜ.க.வினரை சமாதானம் செய்து, பஸ் டிரைவர்களை பஸ்சை கூட்டத்திற்குள் விடாமல் பின்னோக்கி எடுத்து செல்ல வலியுறுத்தினர். இதனால் ஆர்ப்பாட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்