திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் தெற்கு மண்டல் பா.ஜ.க.செயற்குழு கூட்டம்
அந்தநல்லூர் தெற்கு மண்டல் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின் படி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகர் வழிகாட்டுதலின்படி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்குமார் மேற்பார்வையில் ,மண்டல் பார்வையாளர் மாவட்ட துணைத்தலைவர் இந்திரன்ஜி முன்னிலையில் அந்தநல்லூர் தெற்கு மண்டல் செயற்குழு கூட்டம் குழுமணி எம். ஜி. ஆர். சிலை அருகில் நடைபெற்றது.
மாநில , மாவட்ட , மண்டல் நிர்வாகிகள் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் அணி-பிரிவு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ,மண்டல் செயற்குழு உறுப்பினர்கள், கிளை தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கம்பரசம்பேட்டை மற்றும் மருதண்டாகுறிச்சி ஊராட்சிகளை மாநகராட்சி விரிவாக்கம் என்று மாநகராட்சி பகுதியாக மாற்றுவதால் கிராமபுற மக்கள் சுமார் 6 ஆயிரம் பேர் மத்திய அரசின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பலன் கிடைக்காமல் அவர்கள் பொருளாதாரம் ரீதியாக பாதிக்கப்படுவதுடன் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. எனவே மாநகராட்சியாக விரிவாக்கம் செய்வதை கைவிட மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்வது,
அரசு அலுவலகங்களில் பாரத பிரதமரின் புகைப்படத்தை வைக்காமலும் ,மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் போது பாரத பிரதமரை இருட்டடிப்பு செய்து மத்திய அரசு திட்டம் தான் இது என்று தெரிந்துவிட கூடாது என்பதில் கவனமாக செயல்படும் தமிழக அரசையும் அதற்கு உடந்தையாக செயல்படும் அதிகாரிகளையும் கண்டிப்பது,
குழுமணி பகுதியில் உள்ள கால்வாய்களை தூர்வாரி ஆழப்படுத்திட வேண்டும், வியாழன் மேடு பகுதியில் தேசிய வங்கி நிறுவிட வேண்டும், விவசாயிகளுக்கு இரண்டாவது வருடம் 6ஆயிரம் வழங்கி வரும் இரண்டாவது தவணை தொகையை அவர்கள் வங்கி கணக்கிற்கு வரவு வைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் மண்டல் தலைவர் ச.அழகர்சாமி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu