ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் பாஜக தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் பாஜக தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம்
X
ஸ்ரீரங்கம் கோவிலில் வழிபாடு நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலை. 
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சாமி தரிசனம் செய்தார்.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான, ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை வருகை தந்தார். ரங்கநாதரை வழிபட்ட அவர், தொடர்ந்து கோயிலில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதி, ராமானுஜர் சன்னதி, தாயார் சன்னதி மற்றும் ரங்கநாத சுவாமி சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இதைதொடர்ந்து கோவில் பட்டர்கள், அண்ணாமலைக்கு பிரசாதம் வழங்கினர். அவருடன் திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் மற்றும் பாஜக தொண்டர்கள் உடனிருந்தனர். கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், பாஜக தலைவர் அண்ணாமலையுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!