திருச்சி மணிகண்டம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி

திருச்சி மணிகண்டம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி
X
மணிகண்டம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் விற்பனை நேரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் துப்புரவு பணியாளர் வந்துள்ளார். அப்போது டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் ஷட்டர் சற்று தூக்கிய நிலையில் இருந்தது. இதனையடுத்து அவர் டாஸ்மாக் மேற்பார்வையாளர் ராமச்சந்திரமூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அங்குவந்த அவர் மணிகண்டம் போலீசில் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து சப்-இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அங்கு வைக்கப்பட் டிருந்த மது பாட்டில்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் அப்படியே இருந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறு கையில், டாஸ்மாக் கடையின் பூட்டை மர்மநபர்கள் உடைத்து திருட முயன்றபோது அங்கு ஆள் நடமாட்டம் இருந்துள்ளதால் அவர்கள் திருட்டு முயற்சியைக் கைவிட்டு விட்டு அங்கிருந்து சென்றிருக்கலாம் என்றனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!