திருச்சி அருகே மாடு புரோக்கருக்கு அரிவாள் வெட்டு: போலீஸ் விசாரணை

திருச்சி அருகே மாடு புரோக்கருக்கு அரிவாள் வெட்டு: போலீஸ் விசாரணை
X
திருச்சி அருகே மாடு புரோக்கர் அரிவாள் வெட்டப்பட்டது குறித்து போலீஸ் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி ஸ்ரீரங்கம் கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 40). இவர் மாடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் அந்த பகுதியை சேர்ந்த பால் வியாபாரி நடராஜன் (வயது 35) என்பவர் மாடு ஒன்றை வாங்கி உள்ளார். அதனை வேறொருவருக்கு உடனடியாக விற்றுள்ளார். ஆனால் மாடு வாங்கிய பணத்தை சங்கருக்கு கொடுக்கவில்லை.

நீண்ட நாட்கள் ஆகியும் பணம் தராததால், இது குறித்து நடராஜனிடம், சங்கர் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஆத்திரமடைந்த சங்கர், நடராஜனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த நடராஜன், திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!