ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பெண் ஊழியரை தாக்கிய பக்தர் கைது
ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம்.
108 வைணவத் தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில். இங்குள்ள அன்னதான கூடத்தில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. கோயில் அன்னதான கூடத்தில் திருவானைக்காவல் கீழ விபூதி பிரகாரம் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மனைவி கிருஷ்ணவேணி (வயது 25) என்பவர் உணவு பரிமாறும் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கோயிலில் கடந்த 6-ந் தேதி கிருஷ்ணவேணி உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு உணவு சாப்பிட்ட தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நhட்டுசாலையை சேர்ந்த இளம்பரிதி மகன் பிரபாகரன் (32), தான் சாப்பிடும் உணவில் உப்பு இல்லை என்று கூறி கிருஷ்ணவேணியை அவதூறாக பேசி கையால் தாக்கினார். பின்னர் அவரை பிடித்து கீழே தள்ளி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து பிரபாகரனை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu