அந்தநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக கல்வெட்டு உடைப்பு : மர்ம நபர்கள் கைவரிசை

அந்தநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக கல்வெட்டு உடைப்பு : மர்ம நபர்கள் கைவரிசை
X

அந்தநல்லூர் அருகே மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட  அதிமுக கல்வெட்டு.

அந்தநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக கல்வெட்டை மர்ம நபர்கள் துண்டு, துண்டாக உடைத்தனர். இது தொடர்பாக அதிமுகவினர் போலீசில் புகார் செய்தனர்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அந்தநல்லூர் ஒன்றியம் பெட்டவாய்த்தலை பழங்காவேரி பகுதியில் 2011ஆம் ஆண்டு வைக்கப்பட்டுள்ள அதிமுக கல்வெட்டை மர்ம நபர்களால் இரவோடு இரவாக இடித்து உடைத்தனர்.

இதனை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பாக மாவட்ட செயலாளர் பரஞ்சோதி வன்மையாக கண்டித்துள்ளார். மேலும் இந்நிகழ்வு குறித்து அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் அழகேசன் பெட்டவாய்த்தலை காவல் துறையில் புகார் அளித்து உள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்