முக்கொம்புக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

முக்கொம்புக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
X

முக்கொம்பில் சீறிப்பாயும் வெள்ள நீர்

பலத்த மழை காரணமாக முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், கரையோரப் பகுதி மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து 60 ஆயிரம் முதல் 65 ஆயிரம் கன அடி தண்ணீர் நேற்று இரவு திறந்து விடப்பட்டது.

இதனால் காவிரி ஆற்றில் முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. முக்கொம்பு மேலணைக்கு வரும் தண்ணீர் 2 ஆக பிரிக்கப்பட்டு கொள்ளிடம், காவிரி ஆறுகளில் திறந்து விடப்படுகிறது. இதில் கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 48 ஆயிரம் கன அடியும், காவிரியில் டெல்டா பாசனத்துக்காக 17 ஆயிரம் கன அடியும் என ஆக மொத்தம் 65 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கொள்ளிடம் மற்றும் காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் இருகரைகளையும் தொட்ட படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காவிரி மற்றும் கொள்ளிடக்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!