திருச்சி அருகே எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு

திருச்சி அருகே  எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
X

திருச்சி சோமரசம் பேட்டையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு. பரஞ்ஜோதி தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

திருச்சி அருகே சோமரசம் பேட்டையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அ.தி.மு.க.வின் நிறுவன தலைவர் எம்.ஜி.ஆ.ர் பிறந்த நாள் விழா இன்று ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி சோமரசம்பேட்டையில் நடைப்பெற்றது. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், கே.கே.பாலசுப்ரமணியன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு புரட்சித் தலைவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினார்கள்‌. நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை, வார்டு கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமான அளவில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்