திருச்சி பெட்டவாத்தலையில் பரஞ்ஜோதி தலைமையில் அ.தி.மு.க கொடியேற்று விழா
அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தலைமையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி பெட்டவாய்த்தலையில் அ.தி.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது.
விழாவில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் குமார் ,வடக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், முன்னாள் எம்.பி ரத்தினவேல் முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதி,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.செல்வராசு ,பரமேஸ்வரி முருகன் ,முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு (எ)சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்வில் ஒன்றிய கழகச் செயலாளர்கள்,மண்டல, மாவட்ட ,ஒன்றிய, நகர பேரூராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்த பெட்டவாய்த்தலை நகர செயலாளர் செந்தில்குமார் நன்றி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu