திருச்சி முக்கொம்பு அருகே 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 21 பேர் காயம்

திருச்சி முக்கொம்பு அருகே 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 21 பேர் காயம்
X

திருச்சி அருகே மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் இருபத்தோறு பேர் காயம் அடைந்தனர்.

திருச்சி முக்கொம்பு அருகே 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 40). இவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சாமி கும்பிடுவதற்காக எடமலைப்பட்டி புதூரில் இருந்து கரூர் தாந்தோன்றிமலை நோக்கி 22 பேருடன் டூரிஸ்ட் வேனில் சென்று கொண்டிருந்தார்.

முக்கொம்பு அருகே பின்னால் பால் கோவா ஏற்றி வந்த மினி கண்டெய்னர் லாரி டூரிஸ்ட் வாகனத்தை முந்திச் செல்ல முற்படும்போது பல்லடத்திருந்து திருச்சி நோக்கி வந்த அரசுப்பேருந்து கண்டெய்னர் லாரி, டூரிஸ்ட் வேன் மீதும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் டூரிஸ்ட் வேனில் பயணித்த 22 பேரும் காயமடைந்தனர்.மேலும் இதில் படுகாயமடைந்த ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஜீயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுகாயம்பட்ட அனைவரையும் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது