திருச்சியில் குழந்தையை கடத்த முயன்ற மர்ம பெண்ணால் பரபரப்பு

திருச்சியில் குழந்தையை கடத்த முயன்ற மர்ம பெண்ணால் பரபரப்பு
X
திருச்சி திருவானைக்காவலில் குழந்தையை கடத்த முயன்ற மர்ம பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி திருவாணைக்காவல் கொண்டையம்பேட்டையை சேர்ந்தவர் சுதா (வயது 33). இவர் தனது 7வயது மகள் தர்ஷிகாவை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளார். பின்னர் மளிகை பொருட்களை வாங்கி விட்டு தனதுமகளை மறந்த நிலையில் அவர்வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு வந்த பின்னர் மகளை மளிகை கடையிலேயே விட்டு விட்டு வந்ததை உணர்ந்த சுதா திரும்பவும் மகளை தேடி கடைக்கு சென்றார். அப்போது முன்பின் தெரியாத சுமார் 60 வயது மதிப்புள்ள ஒரு பெண் தர்ஷிகாவை மறைவான இடத்திற்கு அழைத்துசென்று காலில் உள்ள கொலுசை கழட்ட முயன்றைகண்டு சத்தம் போட்டுள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளார்.இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசில் சுதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து அந்த பெண் கொலுசிற்காக தான் குழந்தையை அழைத்து சென்றாரா? அல்லது குழந்தை கடத்த முயற்சித்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி அந்த மர்ம பெண்ணை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் திருவானைக்காவலில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story