திருச்சி நாச்சிக்குறிச்சி வாசன் நகரில் 3 நாட்கள் ஆதார் சிறப்பு முகாம்

திருச்சி நாச்சிக்குறிச்சி  வாசன் நகரில் 3 நாட்கள் ஆதார் சிறப்பு முகாம்
X
திருச்சி நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்து நாச்சிக்குறிச்சியில் 3 நாட்கள் ஆதார் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

திருச்சி வயலூர் சாலையில் உள்ளது வாசன் நகர். நாச்சிக்குறிச்சி பஞ்சாயத்து நிர்வாகத்தில் உள்ள இந்த நகரில் வாசன் நகர் குடியிருப்போர் பொதுநல சங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஆதார் சிறப்பு முகாம் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இந்திய அஞ்சல் துறையும், நாச்சிகுறிச்சி பஞ்சாயத்தும் இணைந்து நடத்தும் சிறப்பு ஆதார் முகாமானது 24.02.22 ,25.02.22 மற்றும் 26.02.22 வியாழன் ,வெள்ளி, சனி ஆகிய மூன்று தினங்கள் நடைபெறும்.

நேரம்:-காலை 9.00 முதல் மாலை 6.00 மணி வரை, இடம்:- வாசன் நகர்1வது கிராஸில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் சமுதாயகூடம்.

புதிதாக ஆதார் அட்டை எடுக்க விரும்புபவர்கள் மற்றும் புகைப்படம் மாற்றம், இணையதள முகவரிமாற்றம், செல்போன் எண் மாற்றம், பிழை திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்வோர் உரிய ஆவணங்களுடன் இந்த முகாமில் பயன் அடையலாம் என குடியிருப்போர் நல சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story