விழிப்புணர்விற்காக ஸ்ரீரங்கம் அரசு பள்ளிக்கு வழங்கப்பட்டது துணிப்பை

விழிப்புணர்விற்காக ஸ்ரீரங்கம் அரசு பள்ளிக்கு வழங்கப்பட்டது துணிப்பை
X
ஸ்ரீரங்கம் அரசு பள்ளிக்கு தண்ணீர் அமைப்பு சார்பில் துணிப்பை வழங்கப்பட்டது.
விழிப்புணர்விற்காக ஸ்ரீரங்கம் அரசு பள்ளிக்கு தண்ணீர் அமைப்பு சார்பில் துணிப்பை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பிளாஸ்டிக், மற்றும் பாலிதீன் கேரிபேக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கா தொடக்கப் பள்ளிக்கு வருகை தந்த திருச்சி மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி முத்தழகனிடம் தண்ணீர் அமைப்பு சார்பில் கே.சி. நீலமேகம் துணிப்பை இயக்கம் விழிப்புணர்வுக்காக துணிப்பைகளை வழங்கினார். அந்தநல்லூர் ஒன்றியம் வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம் , விதைகள் யோகதாதன், டாக்டர் சிவபாலன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!