ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியலில் ரூ.83.45 லட்சம், 305 கிராம் தங்கம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியலில் ரூ.83.45 லட்சம், 305 கிராம் தங்கம்
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல் இன்று திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணுவதற்காக எடுத்து செல்லப்பட்டன.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.83.45 லட்சம் பணம் மற்றும் 305 கிராம் தங்கம் கிடைக்கப்பெற்றுள்ளது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல்கள் இன்று காலை திறந்து எண்ணப்பட்டது. கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையிலும், மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன், ஸ்ரீரங்கம் கோயில் மேலாளர் தமிழ் செல்வி ஆகியோர் மேற்பார்வையிலும் கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணம் மற்றும் காணிக்கைகளை எண்ணினார்கள். இதில் ரூ. 83லட்சத்து 45ஆயிரத்து 468பணம் மற்றும் 305 கிராம் தங்கம், 1534 கிராம் வெள்ளி ஆகியவையும், 178 வெளிநாட்டு கரன்சிகளும் இருந்ததாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!